மலேசியா : உள்நாட்டு பிரச்சினை நீடிக்கும்!

திங்கள், 10 டிசம்பர் 2007 (20:22 IST)
மலேசியாவில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சனையால் அங்கு மிக நெருக்கடியாகவே இருக்கும். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை இப்படிப்பட்ட உள்நாட்டுக் குழப்பம் நீடிக்கும்.

மலேசியாவிற்கு ஏழரை சனி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் உள்நாட்டு குழப்பம், அந்நாட்டு மக்கள் உரிமைக்கு போராடுவது ஆகியன நடக்கும்.

சனி கிரகம் அந்த நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கும். ஏனேனில் சனி ஆதிக்கம் உழைக்கும் மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்துவதாகவே இருக்கும். எனவே மலேசிய மக்களிடையேயும், குறிப்பாக அந்நாட்டில் உள்ள உழைக்கும் மக்கள் சமூகத்தில் எழுச்சியை, விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

கீழ்த்தட்டு மக்களுக்கு நியாயம் கிடைக்கக் கூடிய சூழல் உருவாகும். இதில் பலர் பலிவாங்கப்படுவார்கள். சிலர் கொல்லப்படுவார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்