இந்தியா - சீனா இடையே நிலவிவரும் எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண 11வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில், அது சீனத்திற்கே வெற்றியாக முடியும் என்று ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கூறியுள்ளார்!
"இந்திய-சீன உறவில் பெரும் பிரச்சனை இருக்காது. ஏனென்றால் இந்தியா அதிகமாகவே விட்டுக்கொடுத்துச் செல்கிறது. இது சீனத்திற்கே வெற்றி, இந்தியாவிற்கு அல்ல.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு எல்லைப் பிரச்சனையால் சிக்கலாகும். இந்தியாவின் எல்லை மாநிலங்களில் சீனா பிரச்சனையை உருவாக்கலாம் அல்லது தூண்டலாம்.
மொத்தத்தில் இந்திய - சீன உறவில் முன்னேற்றம் ஏதும் இருக்காது".