ஏழை வீட்டில் நல்ல ஜாதகமும், பணக்காரர்கள் வீட்டில் பல கெட்ட ஜாதகமும் இருக்கும் என்று கூறினீர்களே... அதுபற்றி?

புதன், 20 ஆகஸ்ட் 2008 (15:03 IST)
குப்பத்தில் இருப்பார்கள். அவர்களின் பெற்றோர்களும் சரி, அவனும் சரி எந்த தவறும் செய்திருக்க மாட்டார்கள். மற்றவர்களுக்கு முடிந்தவரை நல்லது செய்வான். அவனுக்கு அருமையான ரத்தினம் போல குழந்தை பிறக்கும். எதிர்காலத்தில் அந்த குழந்தை ஐ.ஏ.எஸ். படித்துவிட்டு வருவதை எல்லாம் பார்த்திருக்கிறோம்.

பரம்பரை பணக்காரராக இருப்பார்கள். அவர்களது பதவியைப் பயன்படுத்தி நிறைய தவறுகள் செய்வார்கள். அதனால் கெட்ட ஜாதக அமைப்பில் அவர்களுக்குக் குழந்தை பிறக்கும்.

அதைத்தான் அவ்வாறு சொல்கிறோம். எனவே பெற்றவர்களின் கர்மாக்களை அடிப்படையாக வைத்து பிள்ளைகளின் ஜனனம் அமைகிறது.

முன்னோர்கள் செய்யக் கூடிய நல்வினை, தீவினை போன்றவற்றை வைத்து அந்த குடும்பத்தில் குழந்தைகள் வந்து பிறக்கின்றன. எனவே பிறக்கும் குழந்தையை வைத்து அவர்களது பரம்பரையைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

பெரிய பாரம்பரிய குடும்பமாக இருக்கும். அந்த குடும்பத்தில் ஒருவருடைய ஜாதகத்தைப் பார்த்தால் மகா மட்டமாக இருக்கும். என்னவென்று பார்த்தால் அவர்களது முன்னோர்கள் ஏதோ கெடுதல் செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

இதுபோன்ற குழந்தைகள் இருந்தால் அவர்களது முன்னோர்கள், சிவன் சொத்தை சாப்பிட்டிருப்பார்கள், தம்பி, தங்கைக்கு சேர வேண்டியதை கொடுக்காமல் இருந்திருப்பார்கள் போன்ற பல தவறுகளை செய்திருப்பார்கள்.

ரொம்ப ஏழையாக இருப்பான். அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு உதவி செய்வான், பத்து கோடிக்கு அதிபதியாக இருப்பான், ஐந்து பைசா கொடுக்க மாட்டான். அவர்களது பிள்ளைகளை வைத்தே அவர்களது செயல்களை சொல்லி விடலாம்.

நாம் செய்யக் கூடிய நல்லது கெட்டது, கர்மாவை வைத்தே நமது பிள்ளைகளின் ஜாதகம் அமையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


வெப்துனியாவைப் படிக்கவும்