திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வசித்து வந்தவர் இளைஞர் ஜெயபிரகாஷ்(22). இவர் தனக்கு மிகவும் பிடித்த பைக்கை வாங்கித் தரும்படி தன் அப்பாவிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால், கையில் காசில்லாத நிலையில் அவரது தந்தை, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூறியதாகத் தெரிகிறது. தனக்கு பிடித்த பைக்கை வாங்க முடியாத நிலையில் அவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.