மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது ஏன்? -ஆளுநர் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் கேள்வி

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (12:59 IST)
தமிழக ஆளுனராக ஆர்.என்.ரவி உள்ள நிலையில், சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்கல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது ஏன்? என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
 
தமிழ் நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், ஆளுராக ஆர்.என்.ரவி உள்ளார்.
 
தமிழக ஆளுனருக்கு எதிராக சமீபத்தில் மனு தாக்கல் செய்தது. இதுகுறித்து சமீபத்தில் உச்ச  நீதிமன்றம் ஆளு நருக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.
 
இந்த  நிலையில், ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் தொடங்கியது.
 
அப்போது, ஆளுனர் தரப்பில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டது என கூறப்பட்டபோது, அது தொடர்பாக கோப்புகள் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டதா ?' என்று கே'ள்வி எழுப்பினார்.

மேலும்,' சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்கல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது ஏன்?' என்று  நீதிபதி  கேள்வி எழுப்பினார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்