எனவே, துரிதப்படுத்தப்பட்ட விசாரணையின் அடுத்த கட்டமாக கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் இருவரின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டது. பின்னர் அவர்களை தீவிரமாக விசாரணை செய்தும் வந்தது. இதன்பின்னர் இவர்கள்தான் குற்றவாளிகள் என உறுதிசெய்யப்பட்டனர்.
இந்நிலையில், வில்சனை கொன்றது ஏன் என குற்றவாளிகள் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில், தங்களது அமைப்பைச் சேர்ந்தவர்களை தொடர்ந்து கைது செய்து வந்ததால் வில்சனை சுட்டுக் கொன்றதாக அவர்கள் கூறியுள்ளனராம். மேலும், போலீஸார் தங்களை என்கவுன்ட்டர் செய்யக் கூடும் என்பதால் வில்சனை கொன்றதாக தெரிவித்துள்ளனர்.