சென்னையை வெயில் வாட்டி வதைக்க என்ன காரணம்? – வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

Webdunia
புதன், 17 மே 2023 (09:32 IST)
சென்னையில் கடந்த இரு நாட்களாக வெயில் அதிகரித்துள்ள நிலையில் அதற்கான காரணத்தை வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் அக்கினி வெயில் தொடங்கி நடந்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளிலும் வெயில் வாட்டி வருகிறது. முக்கியமாக கடந்த 2 நாட்களாக சென்னையில் கோடை வெயில் வாட்டி வருகிறது. மக்கள் பலர் வெயிலின் உஷ்ணம் தாங்காமல் தவித்து வருகின்றனர்.

திடீரென சென்னையில் வெப்பம் இவ்வளவு உயர காரணம் என்ன என்பது குறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கமளித்தபோது “வங்க கடலில் உருவான மோக்கா புயல் கரையை கடந்ததால் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் சென்னை கடல் பகுதிகளில் காற்று வீசுவது குறைந்ததால் வெப்பம் அதிகரித்துள்ளது. தற்போது சென்னை பகுதியில் மீண்டும் கொஞ்சமாக கடல் காற்று வீசத் தொடங்கியுள்ளது. எனினும் இந்த வெப்பநிலை அடுத்த 2 நாட்களுக்கு நீடித்து பின் குறையும்” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்