லீவு தறேன்.. ஆனா விளையாடாம ஹோம் வொர்க் செய்யணும்! – ஆட்சியர் அளித்த கலகல பதில்!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (09:44 IST)
கனமழை பெய்வதாக பள்ளிக்கு விடுமுறை கேட்டவருக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள கலகல பதில் வைரலாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் மழை அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் கனமழை அறிவிப்பு காரணமாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நேற்றே இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்திருந்தார்.

இதுதொடர்பான செய்தியில் விருதுநகர் ஆட்சியரை டேக் செய்து பதிவிட்ட விஜய் ரசிகர் ஒருவர் விருதுநகரில் பலத்தை மழை பெய்கிறது சார் என பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள விருதுநகர் ஆட்சியர் மேகநாத் ரெட்டி “விடுமுறைக்காக தொடர்ந்து வேண்டிகொண்டதற்கு நன்றி. விருதுநகரில் கனமழை பெய்து வருவதால் 26ம் தேதி மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை பயன்படுத்தி வீட்டுப்பாடங்களை செய்து முடிக்கவும். ஆசிரியர்கள் அதை சோதிப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்