விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு என்ற ஊராட்சி பகுதியில் எட்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு சரவணன்,ராமமூர்த்தி ஆகிய இருவரும் போட்டியிட்டனர். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது சரவணன், ராமமூர்த்தி ஆகிய இருவரும் சமமாக அதாவது தலா 183 வாக்குகளை பெற்று இருந்தனர். இதனையடுத்து குலுக்கல் முறையில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தேர்வு செய்யலாம் என்று கூறி அதிகாரிகள் இருவரையும் அனுப்பி வைத்தனர்
இதனை அடுத்து அவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னர் திடீரென மண்ணெண்ணெயுடன் வந்து தீக்குளிக்க முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அந்தப் பகுதிக்கு வந்து ராமமூர்த்தியை சமாதானப்படுத்தினர். இதுகுறித்து புகார் மனு எழுதிக் கொடுக்கும்படி போலீசார் அறிவுறுத்தியதை அடுத்து ராமமூர்த்தி புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். இந்த புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.