விஜயகாந்தின் அடுத்த இலக்கு பாஜக?

சனி, 18 ஜூன் 2016 (09:13 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாஜக உடன் கூட்டணி அமைத்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


 
 
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக உடன் கூட்டணி வைத்த விஜயகாந்தின் தேமுதிக, சட்டசபை தேர்தலின் போது கழட்டி விட்டுவிட்டது.
 
பாஜக தரப்பில் இருந்து பல முறை முயற்சி செய்தும் விஜயகாந்த் பிடிகொடுக்காமல் மக்கள் நல கூட்டணியில் போய் சேர்ந்தார். ஆனால் தேர்தல் முடிவு விஜயகாந்தின் அரசியல் அஸ்திரத்தையே ஆட்டம் காண வைத்தது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் விஜயகாந்த் உட்பட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
 
கட்சியின் அங்கீகாரம் ரத்து என சிக்கலில் இருக்கும் விஜயகாந்த் வருகிற உள்ளாட்சி தேர்தலில் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில் தொடர் ஆலோசனையில் இருக்கும் அவர் பாஜக உடன் கூட்டணி வைத்து கட்சியை வளர்க்கலாம் என்ற முடிவில் இருப்பதாக பேசப்படுகிறது.
 
பாஜக மத்தியில் ஆட்சியில் இருப்பதால் அதன் சாதகங்களை பயன்படுத்தி கட்சியை காப்பாற்ற பாஜக உடன் கூட்டணி வைப்பது தான் தற்போது சிறந்த முடிவாக இருக்கும் என விஜயகாந்த் நினைப்பதாக தேமுதிக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்