பண மூட்டையுடன் தப்பியோடிய விஜயபாஸ்கரின் உறவினர்கள்: சல்லடை போட்டு தேடும் வருமான வரித்துறை!

புதன், 12 ஏப்ரல் 2017 (15:51 IST)
ஆர்கே நகர் தேர்தலில் கடைசி தேர்தலில் 25 கோடி அளவுக்கு பணப்பட்டுவாட செய்ய தினகரன் ஆதரவு அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டமிட்டிருந்ததாகவும், அந்த பணத்தை விநியோகிக்க தன்னுடைய உறவினர்கள் மூவரை நியமித்து இருந்ததாகவும் தகவல்கள் வருகின்றன.


 
 
விஜயபாஸ்கருக்கு எதிராக நீண்ட நாட்களாக ஆதாரங்களை திரட்டி வருமான வரித்துறை கடந்த 7-ஆம் தேதி அதிரடியாக அவரது வீட்டில் நுழைந்து சோதனை நடத்தியது. அதில் ஆர்கே நகர் பணப்பட்டுவாட குறித்த மொத்த ஆதாரத்தையும் கைப்பற்றினர்.
 
மேலும் ஆர்கே நகர் தேர்தலில் கடைசி கட்டமாக 25 கோடி ரூபாய் செலவழிக்க திட்டமிட்டிருந்த தகவலும் இந்த சோதனை மூலம் தெரியவந்துள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த அமைச்சரின் உறவினர்கள் மூவர் அந்த பண மூட்டையுடன் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த விபரமும் வருமான வரித்துறைக்கு கிடைத்துள்ளது.
 
ஆனால் வருமான வரித்துறை தங்களையும் தேடி வரக்கூடும் என்பதை அறிந்த அவர்கள் பண மூட்டையுடன் தப்பியோடியுள்ளனர். அவர்களின் விபரங்களை விடுதியில் இருந்து கைப்பற்றிய வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த மூவரையும் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். அவர்கள் சிக்கினால் விஜயபாஸ்கருக்கு மேலும் சிக்கலாகிவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்