வெற்றி துரைசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாமல் திரும்பிச் சென்ற விஜய்?

Sinoj

செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (21:08 IST)
இமாச்சல பிரதேசத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்த  வெற்றி துரைசாமியின் உடலுக்கு   அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் விஜய் அஞ்சலி செலுத்த முடியாமல்    திரும்பிச் சென்றார்.
 
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர், படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்ய  தன் நண்பர் கோபிநாத்துடன் இமாச்சலப்பிரதேச மாநிலத்துக்கு சென்றிருந்தார்.
 
இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள கஷங் நாலா பகுதியில் இவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் ஆற்றில் கடந்த 4ஆம் தேதி கவிழ்ந்தது.
 
இவ்விபத்தில் காணாமல்போன . வெற்றி துரைசாமியை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில்  சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் சட்லஜ் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. இது சைதை துரைசாமியின் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
வெற்றியின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள்  உள்ளிட்ட பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில், முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி சமீபத்தில் நடந்த கார் விபத்தில் காலமான நிலையில் அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகர் அஜித் சென்னையில் உள்ள வெற்றி வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளதாக தகவல் வெளியானது.
ajith vetri2
நடிகர் அஜித்குமார் வெற்றி துரைசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று வெற்றி துரைசாமிக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்ற நடிகரும் தமிழக வெற்றிக் கழகக் கட்சித் தலைவருமான விஜய் கூட்ட நெரிசல் காரணமாக அஞ்சலி  செலுத்த முடியாமல் திரும்பி சென்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்