இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது மேல் மாடியில் குடியிருக்கும் பிருந்தா வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதை சித்ரா கண்டித்ததால் இருவரிடையே வாக்குவாதம் எழுந்ததாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக பிருந்தாவுடன் தொடர்பில் இருந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி சையது ரியாசுதீனை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தபோது சித்ராவை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
பிருந்தாவிற்கு திருமணம் ஆகும் முன்னரே ரியாசுதினுக்கு அவருடன் பழக்கம் இருந்து பிறகு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் பிருந்தாவை வேறு ஒருவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் பிருந்தாவின் கணவர் வெளிநாடு சென்று விட்டதால் அடிக்கடி பிருந்தாவை தனிமையில் சந்தித்து வந்துள்ளார் ரியாசுதீன். இதையறிந்த வீட்டின் உரிமையாளர் சித்ரா அவர்களை கண்டிக்கவே இடையூறாக இருந்த அவரை கொல்ல இருவரும் திட்டமிட்டு இந்த கொலையை செய்ததாக ரியாசுதீன் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.’