விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு, ஃபேஸ்புக்கில் ஒரு ஜாதி அமைப்பு சார்பில் கொலை மிரட்டல் பதிவு வெளியாகியிருந்தது. பகிரங்க இந்த கொலை மிரட்டல் கண்டு விசி கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், தொல்.திருமாவளனுக்கு கொலை மிரட்டல் விடுக்கபட்ட நபர்கள் மீதும், அந்த ஜாதி அமைப்பு மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்று விசிக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.