குஜராத்தின் மாடல் என்றாலே அனைவருக்கும் முன்னால் குஜராத் முதல்வரும் இந்நாள் இந்திய பிரதமருமான நரேந்திர மோடி தான் ஞாபகம் வரும்
ஆனால் உண்மையான குஜராத் மாடல் இவர்தான் என்று கமலஹாசன் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சற்றுமுன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தனது டுவிட்டரில் கூறியதாவது: குஜராத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியைத் தொடங்கி வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட வர்கீஸ் குரியனின் சாதனையை 'நிஜ குஜராத் மாடல்'எனலாம். பால் உற்பத்தியில் இந்தியாவை உலக முதன்மை பெறச் செய்தவரின் 99 வது பிறந்த நாளில் அவரை அன்பால் நினைவு கூர்கிறேன்.
நிஜ குஜராத் மாடல் இவர்தான் என்பதை கூறி பிரதமர் மோடி சரியான சூடு போட்டு விட்டார் கமலஹாசன் என்று கமெண்ட்டுகளை அவரது கட்சியினர், ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்