டிடிவி.தினகரன் -ஓபிஎஸ் சந்திப்பு: மாயமான் மண்குதிரை- எடப்பாடி பழனிசாமி

Webdunia
வியாழன், 11 மே 2023 (15:10 IST)
டிடிவி. தினகரன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும்  ஓ.பன்னீர்செல்வம்  இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்த நிலையில், சில மாதங்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ஓ.பிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கினர்.

சமீபத்தில், அதிமுகவின் பொதுச்செயலாராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுத்தது செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், ஓ.பி,.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திருச்சியில் மாநாடு நடத்தினர்.

இந்த  நிலையில்,  சில நாட்களுக்கு முன்  ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்துப் பேசினார்.

சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் இச்சந்திப்பு நடைபெற்றது. அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது, இருவரும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாகக் கூறினர்.

இது அரசியலில் பேசப்பட்டு வரும் நிலையில், தினகரன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு பற்றி சேலத்தில்  அதிமுக பொதுச்செயலாளார்  எடப்பாடி பழனிசாமி  கூறியுள்ளதாவது:

''ரூ.30,000 கோடி ஊழல் தொடர்பான ஆடியோ வெளியான நிலையில், அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நான் இதுவரை எந்த சொத்தும் வாங்கவில்லை. தொழிலும் ஈடுபடவில்லை. விவசாரம் மட்டுமே செய்து வருகிறேன்.  1989 ஆம் ஆண்டு முதல் என் மீது எந்த சொத்தும் இல்லை.  நான் சொத்துகளை வாங்கவில்லை. திமுகவின் தூண்டலின் பேரில் என் மீது வழங்குத் தொடரப்பட்டுள்ளது. ஜீரோவும்( ஓபிஎஸ்) ஜீரோவும்( தினகரன்) இணைந்தால் ஜீரோதான்.  டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இணைந்தது என்பது மாயமானும் மண்குதிரையும் ஒன்று சேர்ந்ததுபோல்தான் உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்