அவசர அவசரமாக நிலம் கையகப்படுத்துவது ஏன்? டிடிவி தினகரன் கேள்வி!

வெள்ளி, 6 ஜூலை 2018 (20:06 IST)
சேலம் - சென்னை இடையே எட்டுவழிச்சாலை அமைக்க மத்திய மற்றும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த சாலை சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக அமைக்கப்படுகிறது.
 
இந்த எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும், இந்த திட்டத்திற்காக அவசர அவசரமாக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. 
 
இந்நிலையில், எட்டு வழிச்சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் டிடிவி தினகரன் தலைமையில் அமமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் பேசியது பின்வருமாறு, மக்கள் கேட்காத திட்டங்களை செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் துடிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.  
 
மேலும் எட்டு வழிச்சாலைக்கு அவசர அவசரமாக நிலம் எடுப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 8 வழிச்சாலை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழினிச்சாமி மாற்றி மாற்றி பேசி வருவதாகவும் அவர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்