இருப்பினும், டிடிவி தினகரன், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும், 6 மாதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கலையும் என்று சொல்லி வருகிறார்.
மேலும் தினகரன் கட்சிக்கு கோரும் பெயர்களில் ஒன்றை ஒதுக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து டிடிவி. தினகரன் தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களுடன் சென்னை பெசன்ட் நகர் வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். புதிய கட்சி தொடங்கும் முனைப்பில் டிடிவி. தினகரன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.