பேருந்துகளில் சில்லறை விவகாரம்: போக்குவரத்து ஊழியர்கள் எதிர்ப்பு..!

வெள்ளி, 3 நவம்பர் 2023 (18:07 IST)
மாநகர பேருந்துகளில் பயணிகள் சரியான சில்லறை கொடுத்து பயணச்சீட்டு வாங்க நடத்துனர்கள் நிர்பந்திக்க கூடாது என   சென்னை மாநகர போக்குவரத்து கழகம்  அறிவுறுத்தயதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மோட்டார் வாகனச் சட்டம் 1988, விதி எண் 124-ன் படி சரியான சில்லறையை கொடுத்து பயணிச்சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என வரையறுத்துள்ள நிலையில், பயணிகளிடம் சில்லறை கேட்டு வற்புறுத்தக் கூடாது எனும் சுற்றறிக்கை சட்ட விதிகளுக்கு முரணாக உள்ளது என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனம்  தெரிவித்துள்ளது.
 
இந்த சுற்றறிக்கை சமூக வலைத்தளங்களில் பரவும் போது பயணிகளுக்கும் - நடத்துனருக்கும் இடையே மோதல் போக்கு இன்னும் அதிகமாகும் என்றும், பயணிகள் சரியான சில்லறை கொடுத்து பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அறிவிப்பு பதாகை ஒவ்வொரு பேருந்து நிலையங்களிலும் வைக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்