அதோடு, மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதேநேரம், தமிழக அரசு, மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், பிரபல சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி இன்று திருச்சியில் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார். அங்குள்ள அம்மா மண்டபத்தில் அவர் இந்த போராட்டத்தை துவங்கியுள்ளார். அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.