இன்று சூரிய கிரகணம்; எங்கெல்லாம் தெரியும்? எப்படி பார்க்கலாம்?

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (08:25 IST)
இன்று அரிய வானியல் நிகழ்வான சூரிய கிரகணம் ஏற்படும் நிலையில் குறிப்பிட்ட நகரங்களில் சூரிய கிரகணத்தை பார்க்க இயலும் என கூறப்பட்டுள்ளது.

இன்று வானில் தோன்றும் அரிய நிகழ்வான சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இன்று மாலை 4.30 மணியளவில் தோன்றும் சூரிய கிரகணம் 5.45 வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சுமார் 1 மணி நேரம் 45 நிமிடங்களுக்கு இந்த சூரிய கிரகணம் நிகழ உள்ளது.

வடக்கு மற்றும் வட கிழக்கின் பெரும்பாலான மாநிலங்களில் இந்த சூரிய கிரகணத்தை அரிதாகவே காண முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. தென்பகுதிகளில் ஹைதராபாத், பெங்களூரு, விசாகப்பட்டினம், மங்களூர், சென்னை, திருவனந்தபுரம், கோயம்புத்தூர், ஊட்டி போன்ற பகுதிகளிலும், வடக்கே பாட்னா, கான்பூர், லக்னோ, நாக்பூர், வாரணாசி உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்தும் சூரிய கிரகணத்தை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

சூரிய கிரகணத்தையொட்டி தமிழ்நாட்டில் பெரும்பாலான கோவில்களின் நடை இன்று சாத்தப்படுகிறது. சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் காணக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை காண கோளரங்கம் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர்த்து சூரிய கண்ணாடி எனப்படும் சோலார் கண்ணாடியை கொண்டு சூரிய கிரகணத்தை பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்