தமிழகத்தில் இன்றும் நாளையும் 7 மாவட்டங்களில் அதிக வெப்பம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து நாளை நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறையுமா என்ற அச்சம் தேர்தல் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது என தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் இன்றும் நாளையும் 7 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்றும் குறிப்பாக 100 டிகிரி செல்சியஸ் வெப்பம் தாண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், திண்டுக்கல், கோவை ஆகிய 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெப்பம் 100 டிகிரியை தாண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. எனவே இந்த மாவட்டங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறையுமா என்ற அச்சம் தேர்தல் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது