வெளியானது டி.என்.பி.எஸ்.சி TNPSC குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள்.. நேர்காணல் எப்போது?

Siva
வியாழன், 7 மார்ச் 2024 (12:46 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வுகள் முடிவுகள் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்ட், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பதவிகளில் பதவிகளுக்காக குரூப் 1 முதல் நிலை தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது 
 
இதனை அடுத்து முதன்மை தேர்வு சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த தேர்வு முடிவுகளை விண்ணப்பதாரர்கள் தற்போது பார்த்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மார்ச் 26 முதல் 28 வரை நேர்காணல் நடைபெறும் என்றும், இதுகுறித்த தகவல் வெற்றி பெற்றவர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்