இந்தத் தேர்வை எழுத மாநிலம் முழுக்க 7,93,966 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை. மொத்தம் 5,81,305 பேர் இந்த குரூப் 2 தேர்வை எழுதியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நடந்த முடிந்த குரூப் 2 தேர்வில் ஆளுநர் குறித்த கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றது முதலாக திமுக அரசுக்கும், அவருக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது மட்டுமல்லாமல், திமுகவின் கொள்கைகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்து வருகிறார்.