ரெம்டெசிவிர் மருந்து பதுக்கல், தட்டுப்பாடு! – கண்காணிக்க சிறப்பு மையம்!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (14:32 IST)
தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்துக்கான தேவை மற்றும் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் சிறப்பு மையத்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம அலை வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆரம்பகட்ட கொரோனா தொற்றில் சிறந்த பலனளிப்பதாக ரெம்டெசிவிர் மருந்து உள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு ரெம்டெசிவிர் மருந்து குறைவாக கிடைப்பதாக கூறப்படும் நிலையில், அதையும் சிலர் பதுக்கி அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து பதுக்கல், கள்ளச்சந்தை போன்றவற்றை தடுத்து தட்டுப்பாட்டை சரி செய்ய தமிழக சுகாதாரத்துறை சிறப்பு மையத்தை அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தடுப்பாடு குறையும் பட்சத்தில் நோயாளியின் விவரம் அடங்கிய சீட்டுடன், மருத்துவ சீட்டையும் காண்பித்து ரூ.781க்கு ரெம்டெசிவிர் மருந்தை பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்