மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு -மழைக்கு பலியாகும் உயிர்கள்

வெள்ளி, 3 நவம்பர் 2017 (14:03 IST)
திருவாருர் அருகே அறுந்த கிடந்த மின்சார கம்பியை மிதித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சென்னை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. 
 
சமீபத்தில் கொடுங்கையூரில் இரு சிறுமிகள் தெருவில் அறுந்து கிடந்த மின்சார கம்பிகளை மிதித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இது சென்னை வாசிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
அவர்களுக்கு அரசு ரூ.3 லட்சத்தை இழப்பீடாக அளித்துள்ளது. ஆனால், ரூ.10 லட்சம் இழப்பீடாக கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. அதேபோல், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது என அமைச்சர் வேலுமணி கூறியிருந்தார். 
 
இந்நிலையில், மீண்டும் அதே போன்ற சம்பவம் திருவாரூர் அருகே நடந்துள்ளது. 
 
திருவாரூருக்கு அருகே உள்ள மணலகரத்தில் கலியபெருமாள்(65) என்ற விவசாயி, தனது வயலில் சம்பா பயிரில் தேங்கியிருந்த மழை நீரை அகற்ற சென்ற போது அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்து தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
 
சாலையில் அறுந்து கிடக்கும் மின்சார கம்பியை மிதித்து தொடர்ச்சியாக உயிர்கள் பலியாகி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்