அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஆட்கொணர்வு மனு குறித்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இதில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் இன்று செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பான விசாரணை மூன்றாவது நீதிபதியின் முன் நடந்தது.
இந்த வழக்கின் விசாரணையில் அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா மற்றும் செந்தில் பாலாஜி தரப்பில் என் ஆர் இளங்கோ ஆகியோர் ஆஜராகினர்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழக்கில் ஜூலை 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி மூன்றாவது நீதிபதி சிபி கார்த்திகேயன் ஒத்தி வைத்துள்ளார்.