“உழைத்தவர்களுக்கு தியாகி பட்டம் இல்லை” - ஊழல் வழக்கில் சிறை சென்றவர் தியாகியா? - இபிஎஸ் கேள்வி.!!

Senthil Velan

ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (10:17 IST)
செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்ற பின் நீதிமன்றத்தின் நிபந்தனைகளை பின்பற்றுவாரா? என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர், ஊழல் வழக்கில் சிறை சென்றவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் தேர்தல் நேரத்தில் தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்தார்.
 
திமுகவை வளர்ப்பதற்காக உழைத்த சீனியர்களுக்கு தியாகி பட்டம் கொடுக்கவில்லை என்றும், பல கட்சிகளுக்கு போயிட்டு வந்தவருக்கு தியாகி பட்டம் கொடுத்திருப்பதாகவும்  விமர்சித்தார். 
 
ஏனென்றால் செந்தில் பாலாஜி பொறுப்பில் இருந்த போது, திமுக மேலிடத்தை அதிகமாக கவனித்து இருப்பார் என்றும் கடுமையாக சாடினார். அதனால்தான் செந்தில் பாலாஜிக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளதாக மக்கள் பேசிக்கொள்கின்றனர் என்று எடப்பாடி தெரிவித்தார்.
 
அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நீதிமன்றத்தின் நிபந்தனைகளை செந்தில் பாலாஜி பின்பற்றுவாரா என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, ஒருவேளை நீதிமன்றத்தின் நிபந்தனைகளை அவர் பின்பற்றவில்லை என்றால், காவல்துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வர் மு.க ஸ்டாலின்  நடவடிக்கை எடுப்பாரா? எனவும் வினவியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்