10 நாட்கள் இறைச்சிக் கடைகளை அடைக்க போடப்பட்ட உத்தரவு வாபஸ்!

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (11:30 IST)
'பரூஷன் பர்வா' என்ற திட்டத்தின் கீழ் 10 நாட்களுக்கு எந்தவிதமான இறைச்சிக் கடைகளும் திறக்கப்பட கூடாது எனப் போடப்பட்ட உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15 முதல் 24-ம் தேதி வரை 10 நாட்களுக்கு ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன் விற்பனைக் கடை உள்ளிட்ட அனைத்து இறைச்சிக் கடைகளிலும் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு உச்ச நீதிமன்றத்தின் பரூஷன் பர்வா அனுசரிக்கப்பட உள்ளதே காரணம் என சொல்லப்பட்டது. ஆனால் நகராட்சியின் இந்த உத்தரவுக்கு மக்கள் இடையே எதிர்ப்பு உருவானது.

அதனால் இந்த உத்தரவை இப்போது தேனி மாவட்ட ஆட்சியர் ரத்து செய்து இறைச்சிக் கடைகள் வழக்கம் போல செயல்படலாம் என அறிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்