அமெரிக்கா மற்றும் ஈரான் அமைதி காக்க வேண்டும் - போப் ஆண்டவர் அறிவுரை !

வெள்ளி, 10 ஜனவரி 2020 (16:07 IST)
உலகில் வல்லரசு நாடான அமெரிக்காவுக்கும், அதிக எண்ணெய் வயல்களைக் கொண்ட பாரசீக வளைகுடா நாடான ஈரானுக்கும் இடையே போர் மூளும் அபாயம் இருந்தது. இந்த நிலையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என போப் ஆண்டவர் அறிவுறுத்தியுள்ளார்.
அண்மையில், ஈரான் நாட்டில் இரண்டாம் நிலை தலைவரும் ராணுவ தளபதியுமான சுலைமான் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தின் மூலம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
 
இதற்கு ஈரான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. அங்குள்ள அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவை பழிவாங்குவதாகவும் அறிவித்தது.
 
இதனையடுத்து, அமெரிக்க அதிபர் ஈரான் மீது போர் தொடுக்க வாய்ப்பிருப்பதாக கூறிய நிலையில், அந்நாட்டு செனெட் சபை அதற்கு வழங்காது என்பதால் இந்த விவகாரத்தை அமைதியைக் கடைபிடிப்பதாகக் கூறினார்.
 
இந்நிலையில்,  இரு நாடுகளின் போக்கினால் உலக நாடுகளிடையே பதற்றம் அடைந்துள்ளன.
 
இந்நிலையில், போப் ஆண்டவர் பிரான்சிஸ் இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
 
அவர் கூறியுள்ளதாவது :  சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி நிலவுவதற்க்கான நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்