அதிமுக அரசு வெற்று பேச்சு அரசு என்றும் வெற்றி நடைபோடும் அரசு அல்ல என்றும் அவர் தெரிவித்தார். தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால் பட்ஜெட்டில் எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை. நிதி ஒதுக்கீடு இல்லாமல் எவ்வளவு கணக்கு என்பது தெரியாமல் தள்ளுபடி என்பது கண்துடைப்பு என்று அவர் தெரிவித்துள்ளார்