புதிய சட்டமன்றம் கட்ட ஆளுநர் தடையாக இருக்கிறார்..? புதுச்சேரி அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே உச்சகட்ட மோதல்..!

Senthil Velan
வியாழன், 22 பிப்ரவரி 2024 (17:07 IST)
புதுச்சேரியில் சட்டமன்ற வளாகம் கட்ட ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தடையாக இருப்பதாக சபாநாயகர் புகார் தெரிவித்திருந்த நிலையில், சட்டமன்ற வளாகம் கட்டி முடிக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் உறுதிப்பட கூறியுள்ளார்.
 
புதுச்சேரியில் சட்டப்பேரவை முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம்,  புதுச்சேரியில் புதிய சட்டமன்றம் கட்டுவதற்கு  துணைநிலை ஆளுநர் தமிழிசை  தடையாக இருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
 
இந்த நிலையில் புதுச்சேரி பழைய துறைமுகத்தில் 2.70 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நகர பொழுதுபோக்கு மையத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை திறந்து வைத்தார்.
 
அப்போது முதலமைச்சர் ரங்கசாமி சபாநாயகர் செல்வம் ஆகியோரும் உடன் இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை ஆளுநர் தமிழிசையிடம் புதிய சட்டமன்ற வளாகம் கட்ட நீங்கள் தடையாக இருப்பதாக சபாநாயகர் குற்றம் சாட்டியுள்ளாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
 
இதற்கு பதில் அளிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை முற்பட்டார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் ரங்கசாமி இந்த ஆட்சியில் புதிய சட்டமன்ற வளாகம் கட்ட நடவடிக்கை எடுத்து கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்தார். 
 
மேலும் புதிய சட்டமன்ற வளாகம் கட்ட ஆளுநர் தடையாக இருக்கிறார் என்று குற்றம் சாட்டிய சபாநாயகர் செல்வம் ஆளுநர் அருகில் இருக்கும் போது முதலமைச்சர், துணைநிலை ஆளுநரை காப்பாற்றும் விதமாக குறுக்கிட்டு பதில் அளித்ததால் ஆளுநர் -சபாநாயகர் மோதல் போக்கு தவிர்க்கப்பட்டது.

ALSO READ: விவசாயிகளை சுட்டுக் கொல்வது தான் ஜனநாயகமா..? ராகுல் காந்தி...!
 
இந்த சம்பவம் அரசு விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு விழா மற்றும் எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் செய்தியாளர்களை ஆர்வமுடன் சந்திக்கும் தமிழிசை சௌந்தரராஜன் தற்போது சில தினங்களாக செய்தியாளர் சந்திப்பை தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்