மணல் கொள்ளையர்களை சேசிங் செய்த தாசில்தார் பரிதாப பலி

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2018 (10:09 IST)
மணல் கொள்ளையர்களை சேசிங் செய்த போது தாசில்தார் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மணல் கொள்ளை ஒரு தீராத பிரச்சனை. அரசியல்வாதிகளின் துணையோடு இந்த மணல் கொள்ளை நடைபெறுவது தான் கொடுமையே. மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற பல அதிகாரிகள் மணல் கொள்ளையர்களால் தாக்கப்படும் சம்பவங்களையும் நாம் அன்றாடம் கேள்வி படுகிறோம்,
 
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் காட்டாற்று பகுதியில் மணல் கொள்ளை நடைபெறுவதாக வட்டாட்சியர் பார்த்திபனுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த பார்த்திபனைக் கண்டதும் மணல் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். அவர்களை பிடிக்க அசுர வேகத்தில் சேசிங் செய்தார் பார்த்திபன். அப்போது திடீரென காரின் டயர் வெடித்து, அருகிலிருந்த மரத்தில் மோதி நின்றது. இதில் பார்த்திபன் சம்பவ இடத்திலே பலியாக அவருடன் சென்ற மற்ற 3 அதிகாரிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருடர்களை பிடிக்க சென்ற தாசில்தார் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்