டாஸ்மாக் லாரி கவிழ்ந்து விபத்து.. ஒருவர் பலி.. சிதறிய மதுப் பாட்டில்களை அள்ளிச்சென்ற குடிகாரர்கள்!

Siva

திங்கள், 28 அக்டோபர் 2024 (07:04 IST)
காங்கேயம் அருகே டாஸ்மாக் லாரி, கார் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் கீழே சிதறிய மதுப் பாட்டில்களை அள்ளிச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே டாஸ்மாக் குடோன் லாரி மீது கார் மோதிய விபத்தில் கார் டிரைவரும் உயிரிழந்தார். விபத்தால் லாரி கவிழ்ந்து சுமார் 37 லட்சம் மதிப்பிலான மதுப் பாட்டில்கள் சாலையில் சிதறின.
 
இந்த விபத்துக்கான தகவல் அறிந்த பொதுமக்கள், கார் டிரைவரின் உயிரிழப்பைப் பொருட்படுத்தாமல், சாலையில் சிதறிய மதுப் பாட்டில்களை எடுத்துச் சென்றனர். சிலர் பெட்டி பெட்டியாக எடுத்துச் சென்றதும் கண்டு பிடிக்கப்பட்டது.
 
இந்த சூழ்நிலையை அறிந்ததும் காங்கேயம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், மதுப் பிரியர்கள் பெட்டி பெட்டியாக மதுப் பாட்டில்களை அள்ளிச் சென்றதை தடுக்க போலீசாரால் முடியாத நிலை காணப்பட்டது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்