தமிழ்நாடு மின்சார வாரிய மின்கணக்கீடு மற்றும் கட்டணம் ஆன்லைனிலும், அருகே உள்ள மின்வாரிய அலுவலகங்களிலும் செலுத்தும் வசதி உள்ளது. சமீபத்தில் திமுக பிரமுகரான பத்மப்ரியாவின் தந்தையின் செல்போன் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது.
இதுகுறித்து பத்மப்ரியா ட்விட்டரில் டாங்கெட்கோவை டேக் செய்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில் டாங்கெட்கோ தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் “நுகர்வோர் கவனத்திற்கு, இந்த போலியான குறுஞ்செய்தி பரவி வருகிறது. இது போன்ற குறுஞ்செய்தி ஒருபோதும் எங்களிடமிருந்து வராது. பொருட்படுத்தாதீர்” என தெரிவித்துள்ளது.