அதன்படி இன்று, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், கரூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலும் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.