மெரினா கடற்கரையில் அலங்கார ஊர்தி! – பொதுமக்கள் பார்வையிட அனுமதி!

ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (10:22 IST)
குடியரசு தின விழா அணிவகுப்புக்காக தமிழக அரசால் தயார் செய்யப்பட்ட வாகனம் மெரினா கடற்கரையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழக அரசால் அலங்காரம் செய்யப்பட்ட ஊர்தி மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அந்த வாகனத்தை தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெற செய்ததுடன் மாவட்டங்கள் முழுவதும் காட்சிக்காக கொண்டு செல்லப்பட்டது.

தற்போது இந்த அலங்கார ஊர்தி சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கி 23ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இந்த அலங்கார ஊர்தி மெரினா கடற்கரையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்