காங்கிரஸ் தலைவருக்கு ஆதரவாக பேசிய தமிழிசை சவுந்தரராஜன்

வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (19:27 IST)
மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயரை சூட்டப்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ”தமிழகத்தில் மக்கள் அனைவரும் படித்து முன்னேறி இருக்கிறார்கள் என்றால் அது காமராஜர் கொடுத்த மதிய உணவு தான் காரணம்.
 
அதனால் அந்த மதிய உணவு திட்டத்திற்கு பெரும் தலைவர் காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நெடு நாளாக இருந்து கொண்டு இருக்கிறது.
 
அந்த கோரிக்கையும் வலியுறுத்துவதற்காக பிரகாஷ் ஜவடேகர் அவர்களிடமும் அந்த கோரிக்கை வைத்து அவரும் அவை நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று சொன்னார்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்