கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு தண்ணீர்: தமிழிசை!

புதன், 16 மே 2018 (15:47 IST)
கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகளின்படி எந்த தனிப்பட்ட கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் 112 என்ற எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் இல்லை. 
 
இருப்பினும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற அணிகள் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக ஆளுநரிடம் கடிதம் கொடுத்து காத்திருகிறது. அதேசமயம், 104 தொகுதிகளை பெற்றுள்ள பாஜக ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளது.   
 
கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால், கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை இது குறித்து பேசியுள்ளார்.
 
அவர் கூறியதாவது, கர்நாடகா சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பாஜக பெற்றுள்ளது. நிச்சயமாக அங்கு பாஜக ஆட்சி அமைப்பது உறுதி. 10 வருடங்கள் திமுக.- காங்கிரஸ் ஆட்சி செய்த போது அவர்கள் காவிரி விவகாரத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
 
கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால்தான் தமிழகத்தில் உள்ள நல்லுறவு சீராக பாதுகாக்கப்படும். அதன்மூலம் காவிரி விவகாரத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் தங்குதடையின்றி நமக்கு நீர் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்