வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்கு பருவமழை 2023 ஜனவரி 20ம் தேதி வரை மழைப்பொழிவை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15ல் உருவாகும் காற்றழுத்தம் தமிழகத்தின் மையப்பகுதியை நோக்கி நகரும்.
தமிழகம் முழுவதும் நவம்பர் 15 முதல் 20ம் தேதி வரை இயல்பை விட அதிக மழை பொழிவு இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வெளியான அறிவிப்பில் தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 9-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.