கடந்த அதிமுக ஆட்சியின்போது வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் அரசு பணி மற்றும் மாணவர் சேர்க்கையும் நடைபெற்ற நிலையில், இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இடஒதுக்கீட்டை ரத்து செய்து மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில் முன்னதாக மேற்கொண்ட பணி நியமனம், மாணவர் சேர்க்கையை தொடர்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் மற்றும் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்றும், ஏற்கனவே நடந்து முடிந்த பணி நியமனம், மாணவர் சேர்க்கையில் எந்த தொந்தரவும் செய்ய வேண்டாம். அது அப்படியே தொடரட்டும்” என்றும் தெரிவித்துள்ளது.