நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்ட நிலையில், அந்த சம்மனை சீமான் வீட்டு காவலாளி கிழித்ததாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, சம்மன் வழங்க வந்த காவல்துறையினரை துப்பாக்கி காட்டி மிரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து, அந்த காவலாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து தற்போது காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக, நாளை சீமான் ஆஜராக வேண்டும் என்று கூறி, அவரது வீட்டில் சம்மன் வழங்கப்பட்டது. அந்த சம்மனை அங்கு இருந்த காவலாளி கிழித்ததோடு, துப்பாக்கியுடன் நின்று காவல்துறையினரை மிரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த காவலாளியை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், தனது காவலாளி தவறான முறையில் நடந்துகொண்டதற்காக, சீமானின் மனைவி கயல்விழி காவல் நிலைய ஆய்வாளரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.