ஸ்டெர்லைட் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்சநீதிமன்றம்

திங்கள், 28 மே 2018 (11:41 IST)
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடக்கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி  பேரணி சென்ற பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் நாகர்கோவிலை சேர்ந்த சிவக்குமார் என்பவர் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
 
ஆனால்  உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனவும்  கோடை விடுமுறைக்குப் பின்னரே மற்ற வழக்குகளைப் போல ஸ்டெர்லைட் வழக்கை விசாரிக்க முடியும் எனவும் தற்பொழுது தெரிவித்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதம் குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்