இதனிடையே, ஸ்டெர்லைட்டில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி கூடத்தில் ஒரு நாளைக்கு 500 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்றும், அவசர நிலை கருதி ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்க வேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தது. இதற்கு, ஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.