மக்களிடம் செல்வாக்கு இல்லாத முதல்வர்! எடப்பாடி பழனிச்சாமியின் இடம்

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (13:49 IST)
இந்தியாவில் கொரோனா கால செயல்பாடுகளில் சிறப்பாக செயல்படும் மற்றும் மோசமாக செயல்படும் மாநில முதல்வர்கள் பட்டியலை வெளியாகியுள்ளது.

“ஸ்டேட் ஆஃப் தி நேஷன் 2020: மே” என்ற பெயரில் கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறப்பாக செயல்படும் மாநில முதல்வர்கள் மற்றும் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாத முதல்வர்கள் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது ஐஏஎன்எஸ்-சி.வோட்டர்ஸ் ஆகிய ஆய்வு அமைப்புகள். கிட்டதட்ட 30,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக செயல்படுவதாக 65.69 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மாநில முதல்வர்களின் பட்டியலில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சிறப்பாக செயல்படுவதாக மக்கள் தெரிவிக்க அவர் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் சத்தீஸ்கர் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் முதல்வர்களான பூபேஷ் பாகல் மற்றும் பினராயி விஜயன் ஆகியோர் உள்ளனர். ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 4,5 மற்றும் 6 ஆகிய அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

மக்கள் அதிருப்தியைப் பெற்ற மக்கள் மனதில் குறைந்த செல்வாக்குடைய முதல்வர்கள் பட்டியலில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பாஜகவின் எடியூரப்பா முதல் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 5 ஆம் இடத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்