இந்த நேர்காணல் குறித்த புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது. மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட மொத்தம் ஆறு பேர் நேர்காணல் நடத்தி கொண்டிருக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், 'திருவாரூரில் போட்டியிடுவது நானா? துரைமுருகனா? டி.ஆர்.பாலுவா? என்பது வரும் 4ஆம் தேதி தெரியும் என்று கூறினார். ஆனால் தற்போது மூவருமே நேர்காணல் நடத்தி கொண்டிருப்பதால் மூவரும் திருவாரூரில் போட்டியிட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.