இவர் மாநிலத் தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள மனுவில் ‘வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு ஏ சி சண்முகம் மற்றும் கதிர் ஆனந்த் ஆகியோர் பணப்பட்டுவாடா செய்ததேக் காரணம். அதனால் அவர்கள் இருவரையும் தேர்தலில் இவர்கள் இருவரையும் போட்டியிட அனுமதிக்கக் கூடாது எனக் கூறியுள்ளார். தேர்தல் ஆணையமும் கதிர் ஆனந்த் மேல் கண் கொத்திப்பாம்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் எதாவது செய்து கதிர் ஆனந்தின் மனு நிராகரிக்கப்படலாம் என திமுக தரப்பில் அச்சம் எழுந்துள்ளது. அதனால் அவருக்குப் பதிலாக மாற்று வேட்பாளராக நல்ல வேட்பாளர் ஒருவரை நிறுத்த ஸ்டாலின் நினைக்க அது பற்றி நேற்று துரைமுருகனிடன் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்த துரைமுருகன் கதிர் ஆனந்தின் மனைவியும் தனது மருமகளுமான சங்கீதாவை நிறுத்தலாம் என்றிருந்த அவர் ஸ்டாலினின் பேச்சால் அதிர்ப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.