கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியதிலிருந்து மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து வருகிறார். அதே போல் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்றாலும் கூட அரசியலுக்குள் நுழைவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருவதால் “தமிழகத்தில் வெற்றிடம் நிலவுகிறது” என அடிக்கடி பேசி வருகிறார்.
இந்நிலையில் ”நானும் ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தமிழக மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிப்போம்” என கூறினார். இதனை தொடர்ந்து சமீபத்தில் ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், ”தேவைப்பட்டால் இருவரும் தமிழக மக்களின் நலனுக்காக சேர்ந்து பயணிப்போம்” என கூறியுள்ளார்.
கமல், ரஜினி இருவரின் ஆதரவாளர்களும் தற்போது இதற்கு ஆதரவு அளித்துவரும் நிலையில் ஆன்மீக அரசியலை முன்னெடுத்து செல்லவிருக்கும் ரஜினியும், மய்ய அரசியலை முன்னெடுத்து செல்லும் கமலும் இணைந்து ஒரு ஆன்மீக-மய்ய கூட்டணி அமையுமா? என எதிர்பார்த்து வருகின்றனர்.