பொங்கலுக்கு சிறப்பு பேருந்துசேவை அறிவிப்பு !

செவ்வாய், 11 ஜனவரி 2022 (16:55 IST)
பொங்கல் பண்டிகைக்குப் பிறகான சிறப்புப் பேருந்துச் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோன கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் முழு ஊரடங்கால் வரும் 16 ஆம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிறப்பு பேருந்துகளை வரும் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை இயக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்,  மக்கள் தங்கள் சொந்த ஊரிலிருந்து திரும்ப ஏதுவாக 16 முதல் 18 வரை இயங்க இருந்த   நிலையில், முழு ஊரடங்கால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ஏற்கனவே ஜனவரி 16 ஆம் தேதி முன்பதிவு செய்த தொகை 2  நாட்களில் திரும்பப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்