மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

Siva
செவ்வாய், 21 மே 2024 (13:30 IST)
வேலூரில் மாமியாருடன் மருமகன் குடும்பம் நடத்திய நிலையில் தனது மனைவியை மீட்டு தர வேண்டும் என காவல் துறையில் மாமனார் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் தனக்கு இரண்டு மகள்கள் இருப்பதாகவும் மூத்த மகளை ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்த நிலையில் மாமியார் என்றும் பாராமல் தனது மனைவியுடன் மருமகன் திருமணத்தை மீறி உறவு வைத்துள்ளதாகவும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மாமியாரை தனது வீட்டிற்கு மருமகன் அழைத்துச் சென்றுவிட்டார் என்றும் மகளையும் அடித்து துரத்தி விட்டார் என்றும் தற்போது என் மகள் எனது வீட்டில் தான் தங்கி உள்ளார் என்றும் மனைவியை அழைத்தால் வர மறுக்கிறார் என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

எனவே எனது மனைவியை மருமகனிடமிருந்து மீட்டு தாருங்கள் என்று காவல்துறையில் மாற்றுத்திறனாளி மாமனார் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

மனைவியை துரத்திவிட்டு மனைவியின் அம்மாவுடன் திருமணத்தை மீறிய உறவில் மருமகன் இருக்கும் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்